“சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம் “ எனும் தொனிப்பொருளினை மையமாக கொண்டு உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை றோயல் வித்தியாலய சிறுவர் தின நிகழ்வுகள்(01) பாடசாலையில் இடம்பெற்றது.
பிரபல அரசியல் சமூக செயற்பாட்டாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ கலீலுர் ரஹுமான் அவர்களின் ஏற்பாட்டில், சிரேஸ்ட உளவளத் துணையாளர் ராசிதா நௌசாத் அவர்களின் அனுசரணையில் அதிபர் எம்.எச்.எம். அன்ஸார் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
மாணவர்களை மகிழ்வித்து உற்சாகமூட்டும் இந்த நிகழ்வில், தரம் 1, தரம் 2 மற்றும் தரம் 3 மாணவர்களுக்கு சுமார் 100 புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக எம்.ஏ கலீலுர் ரஹுமான், ஜனாபா ராசிதா நௌசாத், ஜனாப் நௌசாத் உட்பட கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர் சபை உறுப்பினர் எஸ். எல். முஹம்மது நாஸிறூன், பிரபல வர்த்தகர் ஏ. எம். எம். அத்னான் மற்றும் கிறீன் பீல்ட் பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் அதிபரின் நெறிப்படுத்தலில் மாணவர்களுக்கான கலை நிகழ்வுகள்,குழு நிகழ்ச்சிகள் என்பன் மிகவும் சிறந்த முறையில் இடம்பெற்றது.
மேலும், இதன் போது சிறுவர் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பிரதம அதிதியினால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment