கொழும்பு 12 அல்ஹிக்மா தேசியக் கல்லூரியில் க.பொ.த.உயா்தரம் 2021ல் 3 பாடங்களிலும் ஏ சித்திபெற்ற மாணவர்களையும், உயர்தர பாடங்கள் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபரையும் கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பு .வாழைத்தோட்டம் கல்வி அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந் நிகழ்வு கடந்த ஞயிற்றுக்கிழமை 16, மருதானை டவா் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ,பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் ,தேசிய விளையாட்டு கவுன்ஸில் தலைவர் அர்ச்சுன ரணதுங்க மற்றும் உலக அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் கல்லுாாி அதிபா் முல்லை முஸ்ரிபா , எஸ்.எஸ்.டி.எப் இன் கல்லூரி ஆளுநர் டாக்டர் நஸீஹா அமீன், சேஃப்டி ப்ளஸ் உரிமையாளர் அல்ஹாஜ் எம்.எச். நூருல்ஹக் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். பழையமாணவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சியா உல் ஹசன் இந் நிகழ்வினை நெறிப்படுத்தினாா்.
அல் ஹிக்மா கல்லுாாியின் பழைய ஆசிரியா்கள் ,பிரதேச நலன் விரும்பிகள் மாணவர்கள் பெற்றோர்கள்,பழைய மாணவர்கள், எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.மாணவர்களின் கலை நிகழ்வுகள் பலவும் இடம்பெற்றன.
இக் கல்லுாாியை தேசிய கல்லுாரியாக்குவதற்கான திட்டத்தினை அரசுக்கு முன்மொழிந்து அதனைப் பாராளுமன்றத்தில் பேசி அதனைப் பெற்றுக் கொடுத்தவர் முன்னாள் அமைச்சா் ரவுப் ஹக்கீமையே சாரும். 3 பாடங்களில் மூன்று ஏ சித்திபெற்ற மூன்று மாணவிகளுக்கும் பணப் பரிசில்கள் மடிக் கனனிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment