தமிழ் குறுமுனி அகத்தியர் போகர் தொடக்கம் 18 சித்தர்களின் திருவுருவச் சிலைகள் புடைசூழ 1008 லிங்கங்கள் பொறிக்கப்பட்ட பிரம்மாண்டமான சிவலிங்கம் அதனைச் சுற்றி தாரண நாகம் அமையப் பெற்ற பாபநாசர் சிவலிங்கேஸ்வரர் ஆலயத்தை தரிசித்ததும் மெய் சிலிர்த்தது.ஒருவித அதிர்வு ஏற்பட்டது.
இவ்வாறு திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள மாங்காய் ஊற்று எனும் பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற பாவநாசர் சிவன் ஆலயத்தை தரிசித்த கனடா வாழ் சிவபக்தர் குமார் பிரமிப்புடன் தெரிவித்தார்.
சித்தர்கள் குரல் அமைப்பின் தலைவர் சிவசங்கர் ஜி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் அங்கு சென்ற பொழுது கனடா சிவபக்தர் குமாரும் சென்றிருந்தார்.
சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜி , மகேஸ்வரன் சுவாமி, கனடாவில் இருந்து இதனை நேரடியாக காண வேண்டும் என வருகைதந்த பிரபல ஆன்மீக பரோபகாரி அன்பர் குமார், காரைதீவைச் சேர்ந்த ஆன்மீக ஆர்வலர்களான கே.ஜெயசிறில், வி.ரி.சகாதேவராஜா மற்றும் தமிழகரன் சனா ,சனுஸ்காந்த், பிரசானந்த் ஆகியோர் பயணத்தை மேற்கொண்டார்கள்.
இவ்வாறான ஒரு ஆலயத்தை உலகில் நான் எங்கும் கண்டதில்லை என்று அவர் மேலும் சொன்னார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்...
இலங்கைசிவ பூமி என்று திருமூலர் கூறுகிறார். அவர் எழுதிய திருமந்திரத்தில் 2747 வது அடியில் இது கூறப்படுகிறது.
திருகோணமலையில் அடிக்கு ஒரு சிவலிங்கம் உள்ள பகுதி கேள்விப்பட்டு இருக்கிறேன்.
இன்று அதனை நேரடியாக தரிசிக்க முடிந்தது. ஆம். இந்த சிவங்கேஸ்வரர் ஆலயத்தை பிரான்சில் வாழக்கூடிய திருமலை முருகர் சித்தர் அமைத்திருக்கின்றார். 18 சித்தர்களின் திருவுருவச் சிலைகள் அழகாக ஒரு சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
மத்தியில் 21 அடி உயர பாரியதொரு சிவலிங்க சிலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாரிய சிவலிங்கத்தில் 1008 லிங்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதை சுற்றியவாறு ஒரு தாரண நாகம் இருக்கின்றது .
அதற்கு முன்பதாக சிவபெருமானின் திருவுருவம் அமைந்திருக்கின்ற காட்சி அனைவரையும் பிரமிக்க வைக்கின்றது.
சிவபிரான் அடியில் பிள்ளையார் சிலை ஒன்றும் வைக்கப்பட்டிருக்கின்றது.
அதன் கீழ் நீர்த்தடாகம் போன்று காட்சி அளிக்கின்றது அது இயற்கையாகவே ஊற்றெடுக்கின்ற நீர் என்று சொல்லப்படுகிறது.
இங்கு முன்னாள் உள்ள நந்தி, தஞ்சை பெரிய கோயிலில் உள்ள நந்தி போன்று 12 மணிகளும் 12 பற்களுடன் காணப்படுகின்றது. இது மனிதர்களுக்கு ஏற்பட ஏற்படும் 12 பிரச்சனைகளை தீர்க்க வல்லது.
பொதுவாக ஆலயங்களில் விக்கிரகங்களை சாதாரண மனிதர்கள் தொட முடியாது என்று சொல்வார்கள் .ஆனால் இங்கு யாரும் எந்த விக்ரகத்தையும் தொட்டு அபிஷேகம் செய்வதற்கு அனுமதி இருக்கின்றது.
ஆலய வளாகத்தில் அகத்தியர் மாமுனிவரின் சிலையும் அவரது மனைவியின் சிலையும் அமையப் பெற்றிருக்கின்றது.
அதைவிட கருப்பண்ணசாமியின் சிலையும் அமையப் பெற்றிருக்கின்றது.
இப்படிப்பட்ட சிவாலயம் இலங்கை மாத்திரம் அல்ல உலகின் வேறு எந்த பகுதியில் காண முடியாது என்று உணர்ச்சி ததும்ப திரு. குமார் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment