2021 ஜூலை 1 முதல்,இதுவரை 837 சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளை நடத்தியுள்ளதாக இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார். 30 சுப்பர் லீக் போட்டிகள், 33 மாகாண போட்டிகள், 91 சம்பியன்ஸ் லீக் போட்டிகள், தங்கம்/வெள்ளிக் கோப்பை போட்டிகள் உட்பட நாடு பூராவும் 652 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.அதன்படி 2021ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற உள்நாட்டுப் போட்டிகளின் மொத்த எண்ணிக்கை 806 ஆகும். இந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற மொத்த சர்வதேசப் போட்டிகளின் எண்ணிக்கை 31ஆகும். தேசிய அணி 11 போட்டிகளில் பெண்கள் அணி 02 போட்டிகளில், 23 வயதுக்குட்பட்ட அணி 03 போட்டிகளில், 19 வயதுக்கு கீழ்பட்ட அணி பெண்கள் அணி 05 போட்டிகளிலும், 20 வயதுக்குட்பட்ட அணி 07 போட்டிகளிலும், 17 வயதுக்குட்பட்ட அணி 03 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது.கத்தாரில் 09 நாள் பயிற்சி முகாம், சவூதி அரேபியாவில் 17 நாள் பயிற்சி முகாம் ,மீண்டும் கத்தாரில் 9 நாள் பயிற்சி முகாம் 03 சர்வதேச பயிற்சி முகாம்கள் என்பனவும் நடத்தப்பட்டுள்ளன.
2021 ஜூலை 01க்கு முன் 33 போட்டிகள் மட்டுமே நடாத்தப்பட்டன.
கால்பந்தாட்டத்தை மேம்படுத்துவதற்கு விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டி அனுபவங்கள் மிகவும் அவசியமானது என்றும், இலங்கையர்களுக்கு கிரிக்கெட் போலவே கால்பந்தையும் பிரபலமாக்குவதே தனது நோக்கமாகும் என்றும் ஜஸ்வர் உமர் கூறிப்பிட்டார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment