கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "வலய மட்ட பிரதான சிறுவர் தின விழா - 2022" நிகழ்வானது கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் சனிக்கிழமை (01) சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
“சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம் “ எனும் தொனிப்பொருளினை மையமாக கொண்டு இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிரதம உள்ளக கணக்காய்வாளர் எச்.எம்.எம்.றஷீட் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.எம்.ஜவாத் கலந்து சிறப்பித்தார்.
மாணவர்களின் கலை, இலக்கிய நிகழ்வுகளும் துவிச்சக்கர பேரணியும், பரிசளிப்பும் இடம்பெற்ற இவ்விழாவில் கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள், மற்றும் கல்முனை வலயப்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment