அஹ்மது நாயகத்தின் உதய தினத்தை சிறப்பிக்கும் முகமாக ஏறாவூர் மீலாத் குழுவினால் ஏறாவூரில் உள்ள ஸுன்னத்வல் ஜமாஅத் அகீதாவை பின்பற்றுகின்ற கிதாப், கிப்ழு மத்ரசாக்கள் மற்றும் உலமா பெரும் தகைகள், முஹிப்பீன்கள், பொது மக்கள் என பலதரப்பட்ட தரப்பினரும் இனைத்து மீலாத் தின நிகழ்வை ஏற்பாடு செய்தனர்
அதில் முதல் நிகழ்வாக 2022.10.09 அன்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 02.30 மணிக்கு மௌலவி AAA.இப்ராகீம் ரப்பானி அஸீஸி அவர்களின் தலைமையில் ஸலவாத் மஜ்லிஸ் முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரண்டாம் நிகழ்வாக மீலாத் குழுவின் தலைவர் மௌலவி AM.றிம்சான் றிஸ்வி அவர்களின் மீலாத் ஊர்வலம் இன்று மீராலெப்பை வலியுல்லாஹ் தர்கா ஷரீபில் ஆரம்பித்து ஏறாவூர் நகர் பற்று பிரதேச வீதிகளின் ஊடாக ஊர்வலமாக சென்று வாளியப்பா ஜூம்ஆ பள்ளிவாயலில் இறுதி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அஸ்ஸெய்யித் அல்ஹாஜ் யூசுப் கோயா தங்கள் அல் ஹஸனி- காதிரி வர்ரிபாயி(கத்தஸல்லாஹுஸிர்ரஹு அஸீஸ்) அவர்களின் புதல்வர் மௌலான அஸ்ஸெய்யித் புர்ஹானுத்தீன் தங்கள் (ஸஹ்தி,அல்அப்ழலி,அல் ஹஸனி - மத்தழில்லஹூல் ஆலி) அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள் இவர்களுடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா மற்றும் அறபுக்கல்லூரி அதிபர்கள், உஸ்தாத்மார்கள், மாணவர்கள் மற்றும் குர்ஆன் மத்ரசா உலமாக்கள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment