சம்மாந்துறை மதீனா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இளையோருக்கான மென்பந்து கிரிக்கெட் தொடர் சம்மாந்துறை தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
மதீனா விளையாட்டுக்கழகத்தின் வளர்ந்து வரும் வீரர்களை 04 அணிகளாக பிரித்து இத் தொடர் இடம்பெற்றது.
விறுவிறுப்பாகச் சென்ற இத்தொடரில் பல முயற்சிகளை மேற்கொண்ட இரு அணிகளாக இறுதிப் போட்டிக்குள் மதீனா சூப்பர் ஸ்ரைகெர்ஸ் மற்றும் பியர் லெஸ் மதீனா ஆகிய அணிகள் நுழைந்தன.
இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பியர் லெஸ் மதீனா அணி துடுப்பாட்டத்தை தீர்மானித்து கழமிறங்கி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 45 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. தொடர்ந்தும் 46 என்ற வெற்றியிலக்கை நோக்கி கழமிறங்கிய மதீனா சூப்பர் ஸ்ரைகெர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் ஓட்ட இலக்கை அடைந்து இறுதிப்போட்டியில் வெற்றி அடைந்தது.
இறுதியில் போட்டியில் அதிதிகளாக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்fனான், ரோயல் மெட்ரிக் அணியின் ஆலோசகர் ரிஷா, மதீனா விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment