கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தின் புதிய தலைவராக தலைவர் ஏ.டபிள்யூ.எம் ஜெஸ்மீன் தெரிவுசெய்யப்பட்டார்.
கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழக 2023 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கான கழக வருடாந்த பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (16)கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் மாலை சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தின் புதிய தலைவராக தலைவர் ஏ.டபிள்யூ.எம் ஜெஸ்மீன் தெரிவுசெய்யப்பட்டார்.
அத்துடன் பொதுச்செயலாளர் ஏ.ஜே.சமீமும் பொருளாளராக பொருளாளர் நதீர் பாறுக் உட்பட பல்வேறு பதவி நிலைகளுக்கு நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
இதன் போது இக்கூட்டத்திற்கு ஏ.எம் றியாஸ் தலைமை தாங்கியதுடன் ஏ.ஜே சமீம் நெறிப்படுத்தி புதிய நிர்வாக தெரிவு தொடர்பில் உத்தியோக பூர்வமாக சபையில் அறிவித்தனர்.இதன் படி பொதுக்கூட்ட ஆரம்பத்தில் புதிய நிர்வாக உறுப்பினர்களின் தெரிவு தொடர்பில் நிகழ்வு இடம்பெற்றதுடன் கழக வளர்ச்சிக்காக ஆலோசனை வழங்கியவர்கள் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் நினைவு கூறப்பட்டு சிறு உரைகள் நிகழ்த்தப்பட்டன. இதன் போது இப்பிராந்தியத்தை மையப்படுத்தி எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இதற்கமைய தவிசாளர் -ஏ.எம். றியாஸ், துணை தவிசாளர் -பி.எம் கலில் றகுமான், தலைவர் -ஏ.டபிள்யூ.எம் ஜெஸ்மீன், பிரதி தலைவர் -ஏ.மன்சூர் , உப தலைவர் -என்.சங்கீத், உப தலைவர்- ரி.எம் றிபாய் ,பொதுச்செயலாளர்- ஏ.ஜே.சமீம் , உப செயலாளர்- எஸ்.என்.ராஜ்குமார், பொருளாளர்- நதீர் பாறுக், உப பொருளாளர்- ஏ.எஸ்.றம்ஸீர் , கணக்கு பரிசோதகர் -சுந்தரலிங்கம் ,இணை முகாமையாளர்கள் -ஏ.எல்.எம் சலீம், சபீர் ,ஊடக செயலாளர்- பாறுக் ஷிஹான், பிரதம பயிற்றுவிப்பாளர்- யு.எல் ஹிலால் ,பயிற்றுவிப்பாளர்- (பந்து வீச்சு) பி.மதன், பயிற்றுவிப்பாளர் -(துடுப்பாட்டம்) எம்.எஸ் அஸ்பர், பயிற்றுவிப்பாளர் - (களத்தடுப்பு) எம் .செந்தூரன் ,இணைப்பாளர்- ஏ.எம் நாஸர் ,பிரதான இணைப்பாளர்- பி.எச்.எம் முபீன் ,இணைப்பாளர் -ரி.எம் ஜஹான் ,இணைப்பாளர் -ஏ.லவக்குமார், இணைப்பாளர் -றகுமான் , போசகர்கள் -ஹிபத்துல் கரீம் ,எம்.பி.அக்மல், எம்.ஏ நஜீமுத்தீன், ஏ.எல் றபீக் ,வி.வரதன் , ஆலோசகர்கள் வைத்தியர்களான ஜெ.எம் றிசான் ,ஜி.எம் கமால் எஸ்.தர்மலிங்கம் ஆகியோர் புதிய நிர்வாக தெரிவில் உள்வாங்கப்பட்டனர்.
சுமார் 35 வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு வருகின்ற இக்கழகத்தில் பல்லின மக்கள் உள்வாங்கப்பட்டு இயங்குவதுடன் பிரதேச வாதமற்ற ஒரு சிறப்பான கழகமாக இப்பிராந்தியத்தில் செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பிராந்தியத்தில் நாட்டின் அசாதாரண சூழ்நிலை மற்றும் கொரோனா அனர்த்த காலங்களில் சிறப்பாக செயற்பட்ட ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் கழகத்தின் தகவல் தொடர்பு ஊடக செயலாளராக தெரிவு செய்யப்பட்டார்.
0 comments :
Post a Comment