கிழக்கில் 50ஆயிரம் ஏக்கர் காணிகள் ஆக்கிரமிப்பு! பொத்துவில் கனகர் கிராம உலக உணவு தினத்தில் கருத்து.



வி.ரி சகாதேவராஜா-
ர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு, சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பு ,அம்பாறை மாவட்டத்தின் யுத்தத்தால் இடம்பெயர்ந்த
கனகர் கிராம மக்களின் காணிகளில் தானியச் செய்கையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டது.

இதற்கமைய கனகர் கிராமத்தில் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறுவதற்கு பல்வேறு எதிர்ப்புக்களைச் சந்தித்த மக்கள் தற்போது துணிச்சலாக தமது காணிகளை துப்பரவு செய்து வருகின்றனர்.

இவ்வாறு தமது பூர்வீக காணிகளை துப்பரவு செய்துள்ள 25 பயனாளிகள் தானியச் செய்கைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பயறு,சோளன்,கச்சான் ஆகிய தானிய வகைகள் வழங்கப்பட்டதோடு அம்மக்களின் காணிகளில் அவர்களின் இருப்பை உறுதிப்படுத்தித் தரக்கோரி அரசதிணைக்களங்களுக்கும் பரிந்துரை செய்யும் செயற்பாடு திட்டமிடப்பட்டது.

இருந்தாலும் அரச திணைக்களங்கள் மக்கள் மீளக்குடியேறுவதற்கு எதிர்ப்பாக உள்ளமையால் மக்களாகவே தமது பூர்வீக காணிகளில் இன்று பயிர்ச்செய்கையை ஆரம்பித்து சுமார் 32 வருடங்களுக்குப்
பின் காணிகளில் குடியேறியுள்ளனர்.

இம்மக்கள் மீளக்குடியேறுவதற்கு பக்க பலமாக உள்ள சூழலியல் நீதிக்கான
மக்கள் கூடல் அமைப்பிற்கு நன்றியைத் தெரிவித்ததோடு தமது பூர்வீக
காணிகளை இனி எந்த சந்தரப்பத்திலும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை
என்பதையும் உறுதியாகக் கூறினர்.

கிழக்கில் 50ஆயிரம் ஏக்கர் காணிகள் ஆக்கிரமிப்பு!

உலக உணவு தினத்தை முன்னிட்டு திட்டமிடப்பட்டுள்ள பரிந்துரை
செயற்பாடுகளும் இயற்கை விவசாயச் செய்கை ஊக்குவிப்பு தொடர்பாக சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பின் பிரதிநிதி T..காத்தவராயன் கூறுகையில்... சர்வதேச உணவு தினம் அனுஸ்டிக்கப்படுகின்ற இவ்வாறான
நிலையில் இதற்கு மறுபுறம் இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகும் நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த நிலை காரணமாக மக்களின் வாழ்க்கை முறையில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒரு வேளை உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் மக்கள் பெரும் போராட்டங்களைச் சந்திக்க நேர்ந்துள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் யுத்தத்தால் பெரிதும்
பாதிக்கப்பட்ட மக்கள் இதுவரை தமக்கான சரியான அரசியல் தீர்வு கிடைக்காத நிலையில் மேலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த நிலைக்கு தற்போதைய பொருளாதார நெருக்கடி ஒரு காரணமாக அமைந்தாலும் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு தரப்பினராலும் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையும் முக்கிய காரணமாகும். கிழக்கைப் பொறுத்த வரையில் சுமார் 50000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் அரசு மற்றும் பல்வேறு தரப்பினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதன் காரணமாக தமக்கான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு வழிகளிலும் மக்களின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள்
விடுவிக்கப்படுமாயின் அவர்களின் வீட்டுத் தேவைக்கான உணவையேனும்
உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும் என்பது உறுதியான
விடயமாகும். இந்த நிலையை எமது அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டியது முக்கிய விடயமாகும். என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :