வளத்தாப்பிட்டியில் 87 வது நாள் உரிமை போராட்டம்!



வி.ரி.சகாதேவராஜா-
க்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து
100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் அமைப்பு அம்பாறை மாவட்டத்தின் வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் நேற்று முன்தினம்  (26.) ஆர்ப்பாட்ட பேரணியை நடாத்தியது..

“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 87ம் நாள் போராட்டம் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, பிரதேசத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி கிராமத்தில் நேற்று இடம்பெற்றது.

கவனயீர்ப்பு போராட்டத்தில் சம்மாந்துறை பிரதேசத்தின் விவசாய சங்கத்தினர், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்கள் இணைந்தனர்.

அவர்கள் " எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும். எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை," போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்தனர்.ஊர்வலம் வளதாப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் கோயிலில் இருந்து பேரணியாக வருகைதந்தது.

வளத்தாப்பிட்டி சந்தியில் தங்களின் உரிமை சார்ந்த கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.அதன் பின்னர் கலைந்து சென்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :