துருக்கி நாட்டின் 99வது தேசிய குடியரசு தினம் 28.10.2022 காலிமுகத்திடல் ஹோட்டலில் நடைபெற்றது. இந் நிகழ்வுகள் துருக்கியத் துாதுவா் ஆர்.டிமிட் சேக்குருசி குழு தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்வியமைசச்சா் சுசில் பிரேம்ஜயந்த, சுற்றாடல்துறை அமைச்சா் நசீர் அஹமட் ஆகியோா் அதிதிகளாக கலந்து கொண்டு இலங்கை-துருக்கி நட்புறவுகள், துருக்கி நாடு இலங்கையின் அனா்த்தங்களின்போது உதவிய திட்டங்கள் மற்றும் துருக்கி இலங்கை நாடுகளுக்கிடையே கல்வி அபிவிருத்திகள் பற்றியும் உரையாற்றினாா்கள்.
இந் நிகழ்வின்போது துருக்கி நாட்டின் 99வது ஆண்டின் குடியரசின் தினத்திற்கான கேக்கினை சபாநாயகா் மகிந்த அபேரத்தின துருக்கித் துாதுவர் இணைந்து வெட்டி பகிா்ந்து கொண்டனா். இந் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சா் அலி சப்றி, நீதியமைச்சா் விஜயதாச ராஜபக்ச, வெளிநாட்டுத் துாதுவா்கள், துருக்கி நாட்டவா்கள் இலங்கையின் வாழ்பவா்கள், முப்படைத் தளபதிகள், பாராளுமன்ற உறுபப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்காா். முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவுப் ஹக்கீம், ஊடகவியலாளா்கள் என பலரும் கலந்து கொண்டனா்.
0 comments :
Post a Comment