பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் பாவனையிலிருந்த Anesthesia Ventilator இயந்திரம் கடந்த சில மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளதை உடனடியாக திருத்தம் செய்து பாவனைக்குற்படுத்துவற்கு 20 இலட்சம் ரூபாய் பணத்தை அந்நூர் தொண்டு நிறுவனத்தின் குவைத் நாட்டிற்கான நிருவாகி அஸ்ஸெய்க் ஷாமீஹ் சாகிர் அப்துல் அஸீஸ் வழங்கி வைத்தார்.
குறித்த விடயம் தொடர்பில், வைத்தியசாலை நிருவாகம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபிடம் விடுத்த வேண்டுகோளை அந்நூர் தொண்டு நிறுவனத்தின் குவைத் நாட்டிற்கான நிருவாகி அஸ்ஸெய்க் ஷாமீஹ் சாகிர் அப்துல் அஸீஸிடம் முன்வைத்தார். அதற்கிணங்க, நேற்று (24) பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அந்நூர் நிறுவனத்தின் குழுவினர் இயந்திரத்தின் திருத்தப் பணிகளுக்குத் தேவையான 20 இலட்சம் ரூபா நிதியினை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் முன்னிலையில் வைத்தியசாலை நிருவாக்கத்திடம் வழங்கி வைக்கப்பட்டது.
Anesthesia Ventilator இயந்திரம் உடனடியாக பாவனைக்கு வரும் வகையில் திருத்தியமைக்கப்பட்டு வைத்தியாசாலையின் உரிய சிகிச்சைப் பிரிவுக்கு கையளிக்கும்படி பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது பணிப்புரை விடுத்தார்.
இந்நிழ்வில், அல் நூர் தொண்டு நிறுவனத்தின் இலங்கை நாட்டிற்கான தவிசாளர் எஸ்.எம்.அலியார் மற்றும் நிருவாகிகள் ,பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.ஏ.றஹிம், பொத்துவில் ஆதார வைத்தியசாலயின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ரி.எஸ்.ஆர்.ரி.ஆர்.றஜாப், பொத்துவில் பிரதேச செயலாளர் முஹம்மட் இஸ்மாயில் பிர்னாஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment