முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை வேட்பாளர் அல்ஹாஜ் ருஷ்தி உஸ்மான் நவ லங்கா நிதஹஸ் கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நவ லங்கா நிதஹஸ் கட்சியின் அமைப்பாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பத்தரமுல்லையில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று முன்தினம் (29) நடைபெற்றது.
கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது கம்பஹா மாவட்ட அமைப்பாளர் பதவிக்கான நியமனக்கடிதம் அல்ஹாஜ் ருஷ்தி உஸ்மானுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment