"ஒவ்வொரு மாணவர்களினதும் எதிர்காலத்தை வளப்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும்."



கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ் சஹ்துல் நஜீம் தெரிவிப்பு...

சர்ஜுன் லாபீர்-
ன்றைய ஆண்டின் சர்வதேச சிறுவர் தின தொனிப்பொருளான "சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம்" என்ற தொனிப்பொருளினை பிரதிபலிக்கும் வகையில் இன்றைய சிறார்கள் வகுப்பறைகளிலும், வீடுகளிலும், வாழ்கின்ற மற்றும் அவர்கள் சந்திக்கின்ற சூழ்நிலைகளிலும் ஏனைய இடங்களிலும் இந்த தொனிப்பொருளினை மையப்படுத்தி ஒவ்வொரு சிறுவர்களுக்கும் ஏற்றவாறு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதே அரசாங்கத்தினதும், கல்வி அமைச்சினதும் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது.என்பதோடு ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களின் எதிர்காலத்தையும் இந்த தொனிப்பொருளினை மையப்படுத்தி செயற்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் சஹ்துல் நஜீம் குறிப்பிட்டார்.

கல்முனை அஸ் ஸுஹரா வித்தியாலயத்தில் இன்று(3) பாடசாலை அதிபர் எம்.எஸ்.எச்.ஆர் மஜிதிய்யா தலைமையில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டு இருந்தார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்..

பாடசாலைகளில் உள்ள வகுப்பறைகளில் 30 அல்லது 40 மாணவர்கள் கல்வி கற்பார்கள் அத்தனை மாணவர்களினதும் எதிர்காலத்தையும் சிறப்பாக மாற்ற வேண்டிய பொறுப்பு அந்த வகுப்பாசிரியர்களுக்கு இருக்கின்றது.அதேபோன்று ஒரு பாடசாலையில் ஒட்டுமொத்தமாக எத்தனை மாணவர்கள் இருக்கின்றார்களோ அவர்களின் எதிர்காலத்தையும் ஒளிமயமானதான மாற்றுகின்ற பொறுப்பு தலைமை அதிகாரியாக இருக்கின்ற அதிபரிடம் இருக்கின்றது.அதேபோன்று இந்த கல்முனை வலயத்தில் இருக்கின்ற ஏறக்குறைய நாற்பதாயிரம் மாணவர்களின் எதிர்காலத்தையும் ஒளிமயமான எதிர்காலமாக மாற்ற வேண்டிய பொறுப்பு வலயக் கல்வி பணிப்பாளரிடம் இருக்கின்றது

அதாவது மாணவர்கள் உடல் ரீதியாகவோ உள ரீதியாகவோ பாதிக்கப்படாமல் அதனை உறுதி செய்து அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு நாம் எல்லோரும் உறுதுணையாக இருப்பது நமது பொறுப்பாகும்.ஆசிரியர்களின் கற்பித்தல் விடயத்திலும் சரி ஏனைய மாணவர் சார் விடயங்களில் இரவும் பகலுமாக மாணவர்களை கவனித்து அவர்களின் எதிர்காலம் சிறப்புற ஆசிரியர்கள் முயற்சி எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் கோட்டக்கல்வி அதிகாரி வீ.எம் சம்சம்,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் பொறியியலாளர் எம்.எம் அனாப்,உறுப்பினர்களான ஏ.அஸீனா பானு,காமில காரியப்பர், அமீர் ஏ பாருக் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :