வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆய்வுகூட கண்காட்சியொன்று இன்று (6) இடம்பெற்றது.
மாணவிகளின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கண்காட்சி கூடத்தை பாடசாலை மாணவிகள் பார்வையிட்டு பயன்பெற்றனர்.
பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட இந்த கண்காட்சி கூட நிகழ்வில், பகுதித் தலைவர்களான எஸ்.பாறூக் கான், கே.ஆர்.எம்.இர்ஷாத், எம்.எல்.எம்.முஸம்மில் உட்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பலரும் கலந்து கொண்டனர்.
மாணவிகளின் நலன் கருதி குறித்த கண்காட்சியை ஏற்பாடு செய்த விஞ்ஞான பாட ஆசிரியைகளான கே.ஆர்.எப்.இஷாரா, திருமதி எப்.எப்.முனாஸ்தீன், என்.ஆயிஷா சுல்பா ஆகியோருக்கு அதிபர் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment