சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வும் சாதனையாளர்கள் பாராட்டு நிகழ்வும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் தலைமையில் புதன்கிழமை (05) தனியார் மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வுக்கு அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் அண்மையில் வெளியான க.பொ.உயர்தரப் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் 1 ம், 2ம் , 3ம் இடங்களில் பல்கலைக்கழத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 06 மாணவர்கள், புலமைப் பரீட்சையில் அம்பாரை மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்ற ஒரு மாணவனுக்கும் பிரதம அதிதியால் பாராட்டப்பட்டு நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டது. மேலும் சமுர்த்தி சிப்தொறா புலமைபரிசில்கள் பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவான 12 மாணவர்கள் உட்பட சமுர்த்தி பயனாளி குடும்பத்தில் வருமானம் குறைந்த தெரிவு செய்யப்பட்ட 12 மாணவர்கள் அன்பளிப்பு பொருட்களும், பாடசாலை உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது. நிகழ்வில் தொடர்ச்சியாக 45 முதியோர் சங்க அங்கத்தவர்களுக்கும், சமுர்த்தி சங்கத்தின் நீண்டகாலமாக அங்கத்தவர்களாக கடமையாற்றி அரும்பணியாற்றிய17 முதியோர்களுக்கும் அதிதிகளால் நினைவுப்பரிசில்களும், அன்பளிப்புகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு கெளரவ அதிதிகளாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிக்கா, நிந்தவூர் உதவி பிரதேச செயலாளர் ஜீசான் ஆஷிக், சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் ஏ.எம்.ஹிபத்துல் கரீம் ஆகியோரும், சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம், சமுர்த்தி மகா சங்க முகாமையாளர் ஏ.எல்.யூ.ஜுனைதா, சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.றிபாயா, நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல், நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர், நிதி உதவியாளர் ஏ.சி. முஹம்மட், சாய்ந்தமருது சிவில் அமைப்புக்கள் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எல்.எம். பரீட், சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் எம்.எம் எம்.உதுமாலெவ்வை உள்ளிட்ட பாடசாலை அதிபர்கள், முன்பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தொடர்சியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுளும் இடம்பெற்றன.
நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக்கினால் கெளரவிக்கப்பட்டார்கள்
0 comments :
Post a Comment