திருகோணமலையில் நவீன சீதை சிறுகதை நூல் வெளியீட்டு விழா..!



எப்.முபாரக் -
விச்சுடர் சிவரமணியின் நவீன சீதை சிறுகதை நூல் வெளியீட்டு விழா 03-10-2022 திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் அரசரெத்தினம் அச்சுதன் தலைமையில் இடம் பெறவுள்ளது.
நிகழ்வின் முதன்மை அதிதியாக சேனையூர் அனாமிகா களரி பண்பாட்டுமையத்தின் நிறுவனர் பேராசிரியர் பால சுகுமார் அவர்களும், சிறப்பு அதிதியாக திருகோணமலை வலயக்கல்விப்பணிப்பாளர் சி. சிறிதரன் அவர்களும் கெளரவ அதிதியாக மூலோபாயக்கற்கை நிலையத்தின் பணிப்பாளர் ஆ. யதீந்திரா அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பம் ஆகும் நிகழ்வில் வரவேற்புரையை ஊடகவியலாளர் பாலேந்திரலிங்கம் விபூஷிதன் வழங்க நூல் பிரதியை இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண சந்தைப்படுத்தல் முகாமையாளர் நூல் ஆசிரியரிடம் இருந்து நூலைப் பெற்று வெளியீட்டு வைப்பார்.
நூலின் அறிமுக உரையை கவிஞர் க . யோகானந்தன் வழங்க நயவுரையை ஆசிரியை செள. சந்திரகலா வழங்குவார்.
நன்றியுரையை திருகோணமலை பொது நூலகத்தின் பிரதம நூலகர் க. வரதகுமார் நிகழ்த்த நிகழ்ச்சித் தொகுப்பை ஊடகவியலாளர் முகமட் புகாரி வழங்குவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :