இறக்காமம் பிரதேசத்தில் உள்ள பூர்வீக நிலங்கள் மற்றும் பாரம்பரிய வரலாற்று தொன்மைவாய்ந்த குளத்தின் கரையோரப் பகுதிகள் மிக நீண்ட காலமாக மிக நுணுக்கமான முறையில் பல தரப்பினராலும் ஆக்கிரமிக்கப்பட்டு கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் அரசியல்வாதிகளிடமும் அரச நிருவாகத்தினரிடமும் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டும் ஆக்கபூர்வமான எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இறக்காமம் நன்னீர் மீனவ சங்கமும், இறக்கமாம் கால்நடை பண்ணையாளர் சங்கம், விவசாயக் குழு என்பன இணைந்து மேற்படி ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக அம்பாரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
எனவே இது விடயம் தொடர்பாக சிவில் சமூக பிரதிநிதிகளை தெளிவூட்டல் அமர்வும் எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் இறக்காமம் 1-9 நன்னீர் மீனவ சங்கத்தின் தலைவர் என். நிஸ்வி தலைமையில் இறக்காமம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.ஜமீல் காரியப்பர், உதவி தவிசாளர் மௌலவி ஏ.எல்.நௌபர், முன்னாள் தவிசாளர் ஜே.கே.ரஹ்மான், பிரதேச சபை உறுப்பினர் எம்.எல். முஸ்மி ஆகியோருடன் இணைந்து இறக்காமம் பிரதான பள்ளிவாசல் தலைவர்கள், பிரதேச ஜம்மியதுல் உலமா சபையினர், கால்நடை பண்ணையாளர் சங்க உறுப்பினர்கள், நன்னீர் மீனவ சங்க உறுப்பினர்கள், இளைஞர் கழக சம்மேளனம், சமூக ஆர்வலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இறக்காமம் பிரதேசத்தில் உள்ள பூர்வீக நிலங்கள் மற்றும் பாரம்பரிய வரலாற்று தொன்மை வாய்ந்த குளத்தின் கரையோரங்கள் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றினைந்து செயற்படுவதற்கான நடவடிக்கைகள் இக்கூட்டத்தின் பின்னர் முடிக்கிடவிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment