கொழும்பு 10 இல் அமைந்துள்ள அலக்ஸோர் சர்வதேச பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய பிரபல கணிதப்பாட ஆங்கில ஆசிரியர் மொஹமட் ராசிக் இன்று (27) சுகயீனம் காரணமாக வபாத்தானார்.
இக்கிரிகொல்லாவையை பிறப்பிடமாக கொண்ட மொஹமட் ராசிக் அவர்கள், 3 பிள்ளைகளின் தந்தையாவார்.1972 ம் ஆண்டு பிறந்தவரான ,இவர் பல வருடங்களாக அலக்ஸோர் சர்வதேச பாடசாலையில் சிறந்த ஒழுக்காற்றுஆசிரியராகவும், கணிதப்பாட ஆசானாகவும், சிறந்த அதிபராகவும் கடமையாற்றினார். அத்துடன் பின்னைய காலங்களில் மல்வானை பாடசாலையிலும் கடமையாற்றினார்.
கல்வி கற்ற பல மாணவர்களின் மனதில் மட்டுமல்ல பெற்றோரது அன்பையும் மதிப்பையும்பெற்ற, ஒரு கௌரவமான ஆசானான மொஹமட்ராசிக் அவர்களின் இழப்பு கொழும்பு வாழ் மாணவர் பலருக்கு பேரிழப்பாகும்.
அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் நாளை (28 ) காலை அனுராதபுரம்-இக்கிரிகொல்லாவையில் இடம் பெற உள்ளது.
மேலதிக தகவல்களுக்கு அன்னாரது மகன் மொஹமட் இப்திகாரை தொடர்புகொள்ளவும் , .தொலைபேசி இலக்கம் 0710430201/0779244343.
0 comments :
Post a Comment