பிரதோஷ விரதங்களில் முதன்மையான சனிப் பிரதோஷ விரதம் நேற்று (22) சனிக்கிழமை பரவலாக அனுஷ்டிக்கப்பட்டது.
சித்தர்களின் குரல் அமைப்பினர் இந்த சனிப்பிரதோஷ விரதத்தினை மொனராகலையை அடுத்துள்ள அடர்ந்த கபிலவனத்தில் சிறப்பாக அனுஷ்டித்தனர்.
சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜி தலைமையிலான குழுவினர் இந்த அடர்ந்த கபில வனத்தில் யாகம் செய்து, வில்வ பிரதிஷ்டை செய்து, மரகதலிங்கத்திற்கு மந்திர உச்சாடனம் செய்து வழிபட்டார்கள்.
சித்தர்கள் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன், உப தலைவர் மனோகரன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் ,நமசிவாய மகேஸ்வரன் சுவாமிகளின் ஆலோசனையின்படி இப்பிரதோச விரதம் அனுஷ்டிக்கப்பட்டது.
பிரபல நாதஸ்வர வித்துவான் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பாலகுமாரன் குழுவினரின் அருமையான பாடலும் இடம்பெற்றது. காரைதீவைச் சேர்ந்த ஆன்மீக ஆர்வலர்களான தவிசாளரும் தர்மகத்தாவுமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், கல்வியியலாளர் வி.ரி.சகாதேவராஜா , திருகோணமலை பிரகாஷ் ஆசிரியர் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
வனமெங்கும் குங்கிலியம் மற்றும் அகில் வாசம் வீசியது.
எந்த மிருகமும் அருகில் வரவில்லை. ஆக பிள்ளையார் - யானை மட்டும் வந்து ஆசீர்வாதம் செய்து பிரசாதத்தை பெற்றுக் கொண்டது.
பங்கேற்ற பக்தர்களுக்கு இது வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
அங்கு நளபாகசக்கரவர்த்தி மதி அண்ணரின் கருப்பட்டிக்கூழ் மற்றும் பழங்கள் படைத்து சிவசங்கர் ஜி வில்வ இலை சமர்ப்பணம் செய்து சிவபுராணம் பாடினார். அனைவரும் இணைந்து பாடினர்.
மாலை 6 மணியளவில் விரதபூஜை முடிவடைந்ததும் அடர்ந்த கானகத்திலே மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment