ஓட்டமாவடி சிராஜ் எக்ஸலன் கல்லூரியினால் நடாத்தப்படும் பகுதி நேர வகுப்பு பாடங்களில் திறமை காட்டிய சாதனையாளர்கள கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
ஓட்டமாவடி சிராஜ் எக்ஸலன் கல்லூரியின் அதிபர் ஏ.எல்.ரஹீஸ் (நளிமி) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரியின் பனிப்பாளர் எம்.எம்.எம்.நவாஸ் ஆசிரியர், கல்லூரியின் நிருவாக உறுப்பினர்களான அஷ்ஷெய்க் ஏ.நஜீம் (சிறாஜி), அஷ்ஷெய்க் எம்.கபீர் (இஸ்லாஹி), கல்லூரியின் விரிவுரையாளர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்;.
இதன்போது தரம் 06, 07, 08ல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இவ்வருடத்திற்கான இரண்டாம் தவணைப் பரீட்சையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்களும், பாடங்களில் கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment