சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அல் அக்பர் ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்ற அல் மத்ரசதுல் பதூரியா இணைந்து நடாத்திய மீலாத் விழா நிகழ்வு ஏ.இஸ்ஸடீன் தலைமையில் அல் அக்பர் ஜூம்ஆப் பள்ளி வளாகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக், அதிதியாக பிரதேச செயலக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.பர்ஹான் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது பள்ளிவாசல் மற்றும் குர்ஆன் மதரசா நிர்வாகிகளால் பொன்னாடை போற்றி அதிதிகள் கௌரவிக்கப்பட்டார்கள்.
இந் நிகழ்வில் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு அந் நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய மாணவ, மாணவியருக்கு பெறுமதியான சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கப்பட்டன. மேலும் இந் நிகழ்வில் பள்ளிவாசல் மற்றும் மதரசாவின் தற்போதைய உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், உலமாக்கள் ,தனவந்தர்கள், குர்ஆன் மதரசாவில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment