நிந்தவூரைச் சேர்ந்த இலங்கை கல்வி நிருவாக சேவையின் ஓய்வு பெற்ற சிரேஸ்ட அதிகாரி அல்ஹாஜ்.கே.முஹம்மட் தம்பி தனது 72 ஆவது வயதில், இன்று (6) வியாழக்கிழமை கொழும்பில் காலமானார்.
அன்னார் உதவிக்கல்வி பணிப்பாளர்(உடற்கல்வி) , பிரதேச கல்விபணிப்பாளர் அட்டாளைச்சேனை,பிரதிக்கல்விப்பணிப்பாளர்,கல்முனை, அட்டாளைச்சேனைகல்விக் கல்லூரிபீடாதிபதி, மேலதிக கல்விச்செயலாளர்,
ஆசிரியர் கல்வி ஆணையாளர் என கல்வித் துறையில் பல பதவிகளை வகித்தவர்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் இறுதியில் அரசாங்க
சேவை ஆணைக்குழுவின் கல்விசேவைக் குழு உறுப்பினராக சேவை
ஆற்றியவர்.
அன்னாரது ஜனாஸா நாளை(07) வெள்ளிக்கிழமை காலை நிந்தவூரில் அடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment