பாடசாலைகளில் இலவசமாக வழங்கப்படுகின்ற இஸ்லாம் பாட புத்தகங்களில் மாற்றம் செய்வதற்கு முன்னர் கடும் போக்குவாதிகளின் உள்ளங்களில் மாற்றம் வர வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம். எம் .மஹ்தி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று(29) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவ்வரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
இஸ்லாம் பாடப் புத்தகங்களில் அடிப்படை வாத கருத்துக்கள் உள்ளதாகவும் அவை நீக்கப்பட வேண்டும் எனவும் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி பரிந்துரை செய்தது.
அதற்கு அமைவாக இஸ்லாம் பாட புத்தகங்களை அரசு மீளப் பெற்றமை தலை வலிக்கு காலில் மருந்து கட்டுவது போன்றதாகும். இதனால் மாணவர்களின் கல்வியே பாதிப்படைந்தது.
ஈஸ்டர் தாக்குதலை வைத்து முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்கள் கொஞ்ச நெஞ்சமல்ல. ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் வெளிப்படுத்தப் பட்டிருந்தால் இஸ்லாம் பாட புத்தகங்களை மீளப்பெற வேண்டிய தேவை வந்திருந்திருக்காது.
எனவே முஸ்லீம் மாணவர்களின் கற்கும் உரிமையை பரிக்காமல் புத்தகங்களை தாமதமின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment