ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தினை முன்னிட்டு வேர்கள் மலர் வெளியீட்டு விழா செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
புன்னகை காணும் எமது உலகம் எனும் தொனிப் பொருளிலான சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.சபூஸ் பேகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் வீ.தவராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மீருhவோடை கிராமிய வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர்.எம்.எம்.றிஸ்வியா, உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ், கணக்காளர் எம்.ஐ.எம்.சஜ்ஜாத் அஹமட், மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.ஐ.மாஜிதீன், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.அப்துல் ஹமீட், சமுர்த்தி முகாமையாளர் எம்.ஐ.அப்துல் அஸீஸ் உட்பட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சிறுவர், முதியவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
வேர்கள் மலரின் முதல் பிரதி சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.சபூஸ் பேகமினால் பிரதேச செயலாளர் வீ.தவராஜாவிற்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், பிரதேச செயலாளரினால் அதிதிகளுக்கு மலரின் பிரதிகள் வழங்கப்பட்டது.
இதன்போது சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு அதிதிகளால் பிரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment