சமூக அபிவிருக்கான நிறுவனத்தினால்( ISD)அம்பாறை மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு முரண்பாட்டு தீர்வுகள் தொடர்பான இரு நாள் செயலமர்வு கடந்த (2022.10.11 மற்றும் 12ம் திகதி )காரைதீவு தனியார் மண்டபமொன்றில் இடம் பெற்றது.
இச் செயலமர்வானது சமூக அபிவிருக்கான நிறுவனத்தின் பிராந்திய திட்ட உத்தியோகத்தர் எம்.எஸ்.ஜலீல் தலைமையில் நடைபெற்றது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.ஏ.அஸீஸ் வளவாலராக கலந்து முரண்பாடு என்றால் என்ன? என்பது பற்றி கருத்துரைக்கப்பட்டதுடன் அது தனி நபர்,சமூகத்தின் மத்தியில் காணப்படும் முரண்பாடுகள் எவ்வாறு இருக்கின்றது? அதற்கான தீர்வுகள், முரண்பாட்டின் பின் வன்முறை எவ்வாறு எற்ப்படுகின்றது ?இதனால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்,வன்முறை நிலையினை இல்லாதொழிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் மற்றும் வன்முறைக்கு முன்னால்,பின்னர் எவ்வாறு சமாதான செயற்ப்பாடுகளின் அவசியம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.ஏ.அஸீஸ் வளவாலராக கலந்து கொண்டு சிறந்த முறையில் கருத்துரைத்தார்.
இதன் போது ஸ்பீட் நிறுவனத்தின் எம்.ஐ.றியால், அம்பாறை மாவட்டத்திலுள்ள சுமார் 40 இளைஞர் யுவதிகள் இச் செயலமர்வில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment