மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் கலந்து கொண்ட அறநெறி வாணி விழா நேற்று நடைபெற்றது .
இராமகிருஷ்ண மிஷனின் அறநெறிபாடசாலை வாணிவிழா கல்லடி சுவாமி விபுலானந்த மணிமண்டபத்தில் நடைபெற்றது.
இராமகிருஷ்ண மிஷன் கல்லடி குருகுல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ் தலைமையில் விழா நடைபெற்றது.
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் சிவானந்தா பழைய மாணவருமான க.கருணாகரன் கலந்து சிறப்பித்தார்.
உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் கலந்து கொண்டார். இலங்கையில் இராமகிருஷ்ண மிஷன் எனும் காணொளிக்காட்சி இடம்பெற்றது.
அறநெறிப் பாடசாலை அதிபர் க.மதிவண்ணன் நன்றி உரையாற்றினார்.
0 comments :
Post a Comment