இந்திய தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை நடாத்திய மாபெரும் தமிழ் கலாச்சார சங்கமம் விழா சிறப்பாக நடாத்த உதவிய உள்ளங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று கத்தார் இந்திய சமூக நல மன்றத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு ஊடக அனுசரணை வழங்கிய ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பை கௌரவிக்கும் முகமாக ஸ்கை தமிழ் ஊடகம் சார்பாக ஊடகத்தின் முகாமையாளர் அஸ்வர் ரிஸ்வி அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், டி.வி.எஸ் ஹைதர் குரூப் பணிப்பாளர் ஹைதர் அலி, அல்டிமேட் டிரேடிங் & கான்ட்ரேஷன் பணிப்பாளர், திரு.சக்திவேல் மகாலிங்கம், மங்கள் மற்றும் மங்கை பண்ணை வீடு ரியல் எஸ்டேட் பணிப்பாளர் டாக்டர் வினி சுரீராஜ் பிரியங்கா சுரேஷ், ஸ்கை தமிழ் ஊடகத்தின் முகாமையாளர் அஸ்வர் ரிஸ்வி, ஒருங்கிணைந்த தமிழர் பேரவை தலைவர் சமீர் அகமது, செயலாளர் வலியுல்லாஹ், நிகழ்ச்சி இயக்குனர் சக்திவேல், பேரவை நிர்வாகிகள் மற்றும் அனுசரணையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment