பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டிருந்த நாட்டையும் நாட்டு மக்களையும் மீட்ப்பதற்காக போராடிய மா வீரனே வசந்த முதலிகே என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம். எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று(09) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அப் பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது
பிழையான பொருளாதார கொள்கை, ஊழல், மோசடிகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட இந்நாட்டையும் நாட்டு மக்களையும் மீட்பதற்கான ஜனநாயக போராட்டதை முன்னின்று நடாத்தி வெற்றியும் பெற்ற எம் சொத்தாகவே வசந்த முதலிகேயை பார்க்கிறோம்.
இதனை தாங்க முடியாத அரசியல் வங்குரோத்துக் காரர்கள் போராட்டக் காரர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது மாபெரும் அநீதியாகும்.
வசந்த முதலிகே இன் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அரசாங்கமே வகை சொல்ல வேண்டும் எனவும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார
0 comments :
Post a Comment