அம்பாரை ஆதார வைத்தியசாலையின் மனநல பிரிவும் உளச்சுகாதார முன்னேற்றத்திற்கான நிறுவனமும் இணைந்து நடத்திய "மகிழ்ச்சி முகாம்" உளச்சுகாதார முன்னேற்றத்திற்கான நிறுவனத்தின் அம்பரை மாவட்ட தமிழ் பிரதேச இணைப்பாளர் ஐ.எல். இல்யாஸின் நெறிப்படுத்தலில் இறக்காமம் மதீனா வித்தியாலத்தில் இடம்பெற்றது.
இறக்காமம் பிரதேச செயலக உளவளத்துணை பிரிவின் ஊடாக உளச்சுகாதார முன்னேற்றத்திற்கான நிறுவனத்தினால் நடத்தப்படும் உளச் சுகாதார முன்னேற்ற பயிற்சி நெறியில் கலந்துகொள்ளும் மாணவர்களின் களச் செயற்பாடுகளை மேற்பார்வை செய்யும் நிகழ்வாக "மகிழ்ச்சி முகாம்" ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிராமத்தில் உள்ள ஆண்கள், பெண்கள், பெற்றோர்கள், இளைஞர்கள், மாணவர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து உளவியல் ஆலோசனைகள், மகிழ்ச்சிகரமான வாழ்தல் கலை, முரண்பாடுகளை இனம்காணல், குழுப் பயிற்சிகள், செயல்முறை களச் செயற்பாடுகள் குழு விளையாட்டுக்கள் போன்ற பல்வேறு
சுவாரஷ்யமான நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அம்பாரை ஆதார வைத்தியசாலை உளநலப் பிரிவு வைத்திய நிபுணர் டாக்டர் சமீர, சமூக அபிவிருத்திக்கான தேசிய நிறுவனத்தின் அம்பாரை காரியாலய இணைப்பாளர் திரு. பிரகீத், இறக்காமம் மதீனா வித்தியாலய அதிபர் எம்.ஐ. ஜௌபர், கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் ஏ. நளீம் (மௌலவி),உளவளத்துணை உத்தியோகத்தர்களான ஏ.எல்.பைசால் (மதனி), ஏ.எச். றகீப், எஸ். ஆப்தீன் (அக்கரைப்பற்று), சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச். வஹாப், பயிற்சி நெறியில் கலந்து கொண்ட வளவாளர்கள், நிறுவனத்தின் உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment