கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் கற்கும் இம்முறை புலமைப்பரிசில் எழுத இருக்கும் மாணவ மாணவிகளுக்கு மாதிரி வினாத் தாள்கள் இலவசமாக வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (31) பாடசாலையின் ஆரம்ப பிரிவு பகுதிதலைவர் ஏ.சீ.எம் நளிம் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாடசலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஐ.எம் ஜிப்ரி(LLB),பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் எஸ்.எல் ஹமீட், ஆகியோரினால் பகுதித் தலைவரிடம் மாதிரி வினாத்தாள்கள் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் யூ.கே லாபீர்,எம்.முஸ்த்கீம் உட்பட ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment