அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தினால் புத்தாக்கச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் செயலமர்வு



நூருல் ஹுதா உமர்-
புத்தாக்கச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் செயலமர்வு அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எம். ரஹ்மதுல்லாஹ் தலைமையில் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட அல் - ஹம்றா மகா வித்தியாலயம், அல் - மின்ஹாஜ் மகா வித்தியாலயம், அல் - முனிறா மகளீர் தேசிய பாடசாலை, ஆயிஷா முஸ்லிம் மகளீர் கல்லூரி, அஸ்சிறாஜ் மகா வித்தியாலயம் மற்றும் அல் - இர்ஃபான் மகளீர் கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

கல்வி அமைச்சினால் SESIP செயற்திட்டத்தினூடாக ஆறு பாடசாலைகளுக்கும் தலா எட்டு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களது கண்டுபிடிப்புக்களை வணிகமயப்படுத்துவதற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கும் பாடசாலைகளில் புத்தாக்க கழகங்களை நிறுவுவதற்கும் பயன்படுத்தப்படவுள்ளது.

மேலும் இளம் விஞ்ஞானி எஸ். வினோஜ்குமார் வளவாளராக கலந்து கொண்டு புத்தாக்கம் மற்றும் ஆக்கவுரிமைப்பத்திரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்.


இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வலயக்கல்விப் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில், மாணவர்களுக்கு புள்ளிகளை நோக்காக மட்டும் கல்வித் திட்டம் கொண்டிராமல் புத்தாக்கத்தினூடாக எதிர்கால சவால்களை சமாளிக்க மாணவர்களுக்கு இவ்வாறான புதிய திட்டத்தை கல்வி அமைச்சு ஆரம்பித்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும். இதற்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இணைப்பாடங்களில் இதனை உள்வாங்கி, மாணவர்களுக்கு நல்ல தெளிவூட்டல்களை வழங்க வேண்டும்.


தற்போது நமது நாடு எதிர் கொண்டுள்ள பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்பதற்கு புதிய கண்டுபிடிப்புகள் மிக முக்கியமானவை. எதிர்வரும் டிசம்பர் மாதம் அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் ஒன்றிணைத்து புத்தாக்கம் கண்காட்சியொன்றை நடாத்தவுள்ளோம். அதில் சிறந்த கண்டுபிடிப்புக்களை கல்வி அமைச்சினூடாக வணிகமயப்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இந்த வருடம் இலங்கையில் உள்ள 750 பாடசாலைகளுக்கு இந் நிதி வழங்கப்பட்டுள்ளது. அதில் எமது வலயத்தைச் சேர்ந்த ஆறு பாடசாலைகளுக்கு இந் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. இதனூடாக எமது வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சந்தர்ப்பங்களை வழங்கவுள்ளோம்.

மேலும் இந் நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு துணை நிற்கும் பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எம். சித்தி பாத்திமா அவர்களுக்கும், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஹசீன் அவர்களுக்கும், உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.டி.எம். ஜனோபர் அவர்களுக்கும், இளம் விஞ்ஞானி சோ. வினோஜ்குமார் அவர்களுக்கும் மற்றும் அதிபர்கள் ஆசிரியர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இந் நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :