தமிழ் லெட்டர் ஊடக வலையமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூகப் பணியும் பொறுப்புக் கூறலுக்குமான பன்முக ஆளுமைகளுக்கு விருது வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு (08) அக்கரைப்பற்று அய்னா கடற்கரை வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
தமிழ் லெட்டர் ஊடக வலையமைப்பின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.எல்.றமீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எம்.கோபாலரெத்தினம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அப்துல்லா மஹ்றூப், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எம்.சபீஸ், அட்டாளைச்சேனை அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.ஜுனைதீன், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் ஆகியோர் கெளரவ அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழர் வாழ்வியல் பண்பாட்டு விழுமியங்களை உலகறியச் செய்தலுக்கான சிறந்த கவிஞருக்கான விருதினை செட்டியூர் சிந்தனை பித்தன் மயில்வாகனம் புவிதரனுக்குரிய விருதினை கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.கோபாலரெத்தினம் வழங்கி வைத்தார்.
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து வைத்தியத்துறை, பொறியியல் துறை, சட்டத்துறை, சமூக சேவை, வாழ்வாதார மேம்பாடு, பேரிடர்காப்பு, சமாதானம், நல்லிணக்கம், விளையாட்டு, கலைத்துறை, எழுத்திலக்கியம் போன்ற துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பன்முக ஆளுமைகளுக்கான விருதுகள் இந்நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment