கடற்கரையில் சர்வதேச சிறுவர் தின விளையாட்டு விழா!



காரைதீவு சகா-
ர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு காரைதீவு விபுலானந்த மொண்டிசோரி முன்பள்ளி பாடசாலை நடாத்திய வருடாந்த சிறுவர் தின கடற்கரை விளையாட்டு விழா நேற்று முன்தினம்(1) மாலை கோலாகலமாக இடம் பெற்றது.

பாடசாலையின் ஆசிரியர்களான ஜெயநிலந்தினி ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ,பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக பாடசாலை பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சார்பில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் பி.அமரானந்த கலந்து கொண்டார்.

கடற்கரையிலே சிறுவர்களுக்கான விளையாட்டு கண்கவர் நிகழ்ச்சிகள் சிறப்பாக இடம் பெற்றன.அதனை விளையாட்டு உத்தியோகத்தர் வி.பாஸ்கரன் நெறிப்படுத்தினார்.

கடற்கரையிலே சிறுவர்கள் பெற்றோர்களும் இணைந்து விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

சிறுவர்களின் வினோத உடைப்போட்டி சிறப்பாக நடைபெற்றது.

பங்கு கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசளிப்பு நிகழ்வு இடம் பெற்றது .
பெற்றோர் சார்பில் ஆனந்தன் அமிர்தானந்தன் நன்றி உரை நிகழ்த்த, நிகழ்ச்சிகளுக்கான ஒலி நெறிப்படுத்தலை பெற்றோர் சார்பில் இராஜநாயகம் ரமேஷ் வழங்கி இருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :