இந்த நிகழ்வுக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் பிரதிநிதியாக கலை கலாச்சார பீட பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாசில் அவர்களும், மற்றும் பல்கலைக்கழக விளையாட்டு ஆலோசனை சபை தவிசாளர் பேராசிரியர் ஏ. ஜவ்பர் அவர்களும் மற்றும் விளையாட்டு ஆலோசனை சபை உறுப்பினர்களான விரிவுரையாளர்கள், விடுதி பணிப்பாளர் யூ.எல். மன்சூர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் நினைவு மலரும் வெளியிடப்பட்டது.
மேலும் கராத்தே சங்கங்களின் பிரதிநிதியாக பிரதம போதனாசிரியர்களான கே. கேந்திரமூர்த்தி, டி.எப். அலோசியஸ், கே. ரவிச்சந்திரன், கே. குககுமாரராஜா, ஜோசப் ஜெபனாயகம் மற்றும் கிழக்கு மாகாண கராத்தே சம்மேளன செயலாளர் எஸ். மனோகரன், அதன் உறுப்பினர் ரத்னதாச உட்பட பலர் கலந்து தங்களது பெறுமதியான பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.
ஆறு வயது தொடக்கம் பதின்மூன்று வயது வரையான சப் ஜூனியர் மற்றும் கடெட், ஜூனியர், சீனியர் என அனைத்து பிரிவையும் சேர்ந்த ஆண், பெண் என இருபாலாருக்குமான காத்தா, டீம் காத்தா, குமிதே ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியாவிலிருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டதுடன், நடுவர்களாக இலங்கை கராத்தே சம்மேளனத்தின் தேசிய நடுவர்கள் கலந்துகொண்டு போட்டிக்கான தீர்ப்புக்களை வழங்கினர்.
இந்த போட்டியை சிறப்பாக நடாத்திமுடிக்க உதவிய அனைத்து தரப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பாக பல்கலைக்கழக உபவேந்தர், பதிவாளர், பல்கலைக்கழக விளையாட்டு ஆலோசனை சபை, பொறியியலாளர், உடற்கல்விப்பிரிவு பொறுப்பாளர், ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளன தலைவர், நடுவர் ஆணையம் மற்றும் எனது மாணவர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
0 comments :
Post a Comment