சம்மாந்துறை வலயத்துக்கு உட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் வருடாந்த நாமகள் விழா நேற்று(4) செவ்வாய்க்கிழமை அதிபர் சீ. பாலசிங்கன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளரும் பாடசாலை மேம்பாட்டு திட்ட இணைப்பாளருமான விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா கலந்து கொண்டார்.
கௌரவ அதிதியாக சமுக சேவையாளர் இந்திரன் ரூபசாந்தன் கலந்து கொண்டார். மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மேடையேறின.
பிரதி அதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரனின் ஏற்பாட்டில் உதவி அதிபர் என்.வன்னிய சிங்கம் சிரேஸ்ட ஆசிரியர் என். கோடீஸ்வரன் ஆகியோரின் வழிநடத்தலில் விழா சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் பிரதம அதிதி வேதசகா ஆன்மீக நூல்களை பரிசளித்தார். இறுதியில் விஷேட பூசை இடம் பெற்றது.
0 comments :
Post a Comment