புறோ நைட் செஸ் அகடமி ஏற்பாட்டில் இடம்பெற்ற கிழக்கு மாகாண சதுரங்க போட்டி இன்று (24) சாய்ந்தமருது கமு/கமு/ மல்ஹருஷம்ஸ் மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றி கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வு அவ் அமைப்பின் தலைவர் ஸாக்கிர் அஹம்மட் தலைமையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை பணிப்பாளராக இருந்த றிஸ்லி முஸ்தபா கலந்து கொண்டதுடன் பெற்றோர்கள் சார்பாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளர், பாடசாலை அதிபர் எம்.ஐ. நபார், திடீர் மரண விசாரணை அதிகாரி அல் ஜவாஹிர் உள்ளிட்ட பல கல்விமான்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment