மூதூர் நத்வதுல் உலமா அரபிக்கல்லூரியின் குழுவினருக்கும்; தெ.கி. ப. உபவேந்தர்,நூலகர் மற்றும் சிரேஷ்ட உதவி நூலகர்கள் இடையிலான கலந்துரையாடல்!



மூதூர் நத்வதுல் உலமா அரபிக்கல்லூரியின் நிருவாகத்தினர், தங்களது 60 வருடம் பழமையான அரபிக்கல்லூயில் அமைக்கப்பட்டுள்ள புதிய மூன்று மாடி கட்டிடத்தில் நவீன நூலகம் ஒன்றை அமைப்பதுபற்றி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் 2022 அக்டோபர் 20 வியாழன் அன்று உபவேந்தர் அலுவலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் சார்பாக நூலகர் எம்.எம்.றிபாயுத்தீன், சிரேஷ்ட உதவி நூலகர்களான எம்.சி.எம்.அஸ்வர், கலாநிதி எம்.எம் மஷ்ரூபா, ஏ.எம்.நஹ்பீஸ், எஸ்.எல்.எம்.சஜீர் ஆகியோரும் நத்வதுல் உலமா அரபிக்கல்லூரியின் நிருவாகத்தினரும் கலந்து கொண்டனர். இதன் மூலம் இருதரப்புக் கலந்துரையாடல்களில் இப்பிரதேசத்திலுள்ள அரபிக்கல்லூரி நூலகங்களை மேம்படுத்துவதற்கு வதிவிடபயிற்சி பட்டறையொன்று அவசியம் என பல்கலைக்கழக நூலகர் எம்.எம்.றிபாயுத்தீன் அவர்களால் முன்வைக்கப்பட்டது. இதன்போது தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் தனது கருத்தை தெரிவிக்கையில் பல்கலைக்கழகம் சமூகத்தை நோக்கி செல்ல வேண்டும் சமூகம் பல்கலைக்கழகத்தை நோக்கி வரவேண்டும் அப்போதுதான் தமது சமூகப் பங்களிப்பினை நிறைவேற்றிக் கொள்வதற்கு இச்செயற்றிட்டம் ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் இத்திட்டம் மிகவும் திறம்பட இயங்குவதற்கு தன்னாலான முழு ஒத்துழைப்பினையும், இடவசதிகளையும் மற்றும் வளவாளர்களையும் வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் இக் கலந்துரையாடல் முடிவில் குறித்த இப்பயிற்சிக்கான முன்னெடுப்புகளை வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்கும் இச்செயற்றிட்டத்தை தாங்களே செய்வதற்கும் நத்வதுல் உலமா அரபிக்கல்லூரியின் நிருவாகக் குழுவினர் ஏற்றுக் கொண்டனர். அதேவேளை நூலக மற்றும் பயிற்சி பட்டறையின் குறிக்கோள்கள், எதிர்பாக்கப்படும் அடைவுகள், இலக்குகளையும் நிருவாகக் குழுவினர் மற்றும் குறித்த திட்டத்தின் நிலைபேரான தன்மை போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டன. பின் நூலகத்தை பார்வையிட்டு நூலக அமைப்பு மற்றும் சேவைகளைப் பாராட்டினர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நூலக அமைப்பு மற்றும் சேவைகளால் அவர்கள் மிகவும் ஈர்க்கப்பட்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :