இந்துக்களின் மகா நவராத்திரி விழா இலங்கை, இந்தியாவில் மாத்திரம் அல்ல உலகெங்கும் இடம் பெற்று வருகின்றது.
கடல் கடந்த துபாய் நாட்டிலே நேற்று முன்தினம் "நவராத்திரி மண்டபம் சங்கீதோற்சவம்" என்ற இசை நிகழ்ச்சி துபாய் சார்ஜாவில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இதனை இந்திய துபாய் கன்சுலர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அந்த விழாவிலே "சங்கீதார்ச்சனா" என்ற நிகழ்ச்சி மாணவி நகுலன் ஹிருஷ்ரிதா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு இந்திய துபாய் கன்சுலர் நாயகம் டாக்டர் அமான் பூரி பிரதம அதிதியாக கலந்து கொண்டு பரிசு பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த இசை நிகழ்ச்சிக்கான தயார் படுத்தல்களை இந்திய கேரளாவைச் சேர்ந்த ஆசிரியையினால் பிரபல பாடகர் டாக்டர் உன்னிகிருஷ்ணனின் மேற்பார்வையில் நடைபெற்று வந்தது.
இந்த சங்கீதார்ச்சனாவிலே இலங்கை இந்தியா நேபாளம் போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
இலங்கையின் மட்டக்களப்பு அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஹிருஷ்ரிதா நகுலன் அங்கு சான்றிதழை பெறுவதை படத்தில் காணலாம்.
0 comments :
Post a Comment