அம்பாறை , கல்முனை பிரதான வீதியில் காரைதீவு சந்தியிலிருந்து மாவடிப்பள்ளிக்கு இடைப்பட்ட நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் பெரிய நீர்க் குழாய் செல்லும் பிரதேசங்களில் தினசரி குப்பைகள் சேரும் அளவு அதிகரித்து வருகிறது.
இரவு வேளையில் வாகனங்களில் பயணிப்போர் வீதியின் இருமருங்கிலும் வீசிவிட்டு செல்வதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
காரைதீவு பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட இப்பிரதேசத்தில் கட்டிட இடிபாடுகள் , விலங்குகளின் கழிவுகள் , ஏனைய வீட்டுக்கழிவுகள் காணப்படுதாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்துமாறு பிரதேசவாசிகள் கேட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment