சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இளம் பெண்கள் முஸ்லிம் மாதர் அமைப்பின் யூத் ஸம்ஸ் ஏற்பாடு செய்த நிகழ்வு மாதர் அமைப்பின் தலைவி தேசமாண்ய பவாஸா தாஹா தலைமையில் கடந்த சனிக்கிழமை (22) தெமடட வை.எம்.எம்.ஏ தலைமைக்காரியலயத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியா இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலயத்தின் ஊடக மற்றும் கலாசாரப் பிரிவின் செயலாளர் கல்சூம் ஹைஸர் ஜிலானியும் கௌரவ அதிதிகளாக செயசேகர சிறுவர் பாடசாலையின் அதிபர் திருமதி சேரா ஜெயசேகரஇ வை.எம்.எம்.ஏயின் தலைவர் இஹ்ஸான் அஹமட்இ நஸீரா பவுண்டேசனின் தலைவர் காலித் பாறுக்இ கொழும்பு டைம்ஸ் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் எம்.ஆர்.றசூல்டீன்இ மாதர் அமைப்பின் அங்கதத்வர்கள் மற்றும் பெற்றோர்கள் சிறுவளர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இணையத்ளமூடாக நடாத்தப்பட்ட போட்டிகளில் இலங்கை, இந்தியா, பிரித்தானியா மற்றும் கட்டார் நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 சிறுவர்கள் பங்குபற்றி இருந்தனர். இவர்களில் 12 பேர் தெரிவு செய்யப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

0 comments :
Post a Comment