சர்வதேச வறுமை தினத்தை ஒட்டி சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கான போசனை உணவு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலகத்தின் கல்முனை சமுர்த்தி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட கல்முனை-05 ஹுசைனியா முன்பள்ளி மாணவர்களுக்கு இலை கஞ்சி வழங்கும் நிகழ்வு (17 ) இடம்பெற்றது
கல்முனைப் பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன்,விஷேட அதிதிகளாக கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,சமுர்த்தி மகாசங்க முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா,மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எம்.பாறுக்,சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நௌசாத்,வலய உதவி முகாமையாளர் ஐ.எல்.அர்சுத்தின்,பிரிவுக்குப் பொறுப்பான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.சமீம்,அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்
இதற்கான இதற்கான நிதி பங்களிப்பானது சமுர்த்தித சமுதாய அடிப்படை அமைப்புகள் மற்றும் தனவந்தர்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment