வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட சாதனையாளர்களையும் அவர்களது பெற்றோர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் முப்பெரும் விழா கல்லுரி மண்டபத்தில் இடம் பெற்றது.
கல்லூரியின் முதல்வர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா கலந்து கொண்டதுடன் அதிதிகளாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.ஏ.சி.றமீஸா, பிரதி கல்வி பணிப்பாளர்களான திருமதி எம்.ஜே.றிப்கா, எம்.எச்.எம்.றமீஸ், வீ.ரீ.அஜ்மீர், திருமதி ஜே.தாஜூன் நிஸா, உதவி கல்வி பணிப்பாளர் எம்.ஐ.அஹ்சாப், கல்லூரியின் முன்னாள் அதிபர் யூ.அஹமட், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.எஸ்.எம்.அன்வர் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
கல்லூரியின் வரலாற்றில் முதல் தடவையாக மருத்துவ பீடம், பொறியீயல் பீடம், சட்ட கல்லூரி ஆகியவற்றுக்கு தெரிவான மாணவர்களும் 2020 மற்றும் 2021 ஆண்டு பல்கலை கழகத்திற்கு தெரிவான மாணவர்களும் அவர்களது பெற்றோர்கள் கற்பித்த ஆசிரியர்கள், அதிதிகள் ஆகியோருக்கு கல்லு10ரி நிருவாகத்தினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கல்லூரியின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹிரின் சேவையை பாராட்டி வாழ்த்து மடல் வழங்கப்பட்டதுடன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இதன் போது அதிதிகளும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான சாதனையாளர்களும் பேன்ட்;வாத்திய இசையுடன் ஊர்வலமாக விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன் நிகழ்வில் கல்லூரி மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
0 comments :
Post a Comment