கல்முனை விகாராதிபதியின் பிணைக்கு கையொப்பம் இட்டவர்கள் வீட்டின் மீது தாக்குதல்!



காரைதீவு சகா-
சிறுவர் துஷ்பிரயோக குற்றசாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த கல்முனை சுபத்ரா ராமய விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களுக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை பிணை வழங்கியது.

இருப்பினும் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
3 தனித்தனி வழக்குகளுக்கான தலா 3 பேரின் 5 லட்சம் படி 9 பேரின் சரீர பிணையில் அவர் செவ்வாய்க்கிழமை காலை விடுதலை செய்யப்பட்டார்.

பிணைக்கு ஒப்பமிடுவதில் ஏற்பாட்டாளராக இருந்து செயற்பட்டு
ஒப்பபிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் சிறைச்சாலைக்கு சென்று அவரை அழைத்து வந்து விகாரையில் உள்ள பொலிசாரிடம் ஒப்படைத்தார்.

நேற்றுமாலை அப்பகுதியிலுள்ள வீடுகளில் இடம்பெற்ற வாணிவிழா பூஜைகளிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்.
அன்றிரவு நடுநிசி 12 மணியளவில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.

அத்தருணத்தில் அந்த மக்கள் 119 அவசர பொலிஸ் பிரிவுக்கு அதிகாலை வரை அறிவித்தும் மறுநாள் பகல் வரை யாரும் அங்கு வரவில்லை என்று உறுப்பினர் ராஜன் தெரிவித்தார்.

விகாராதிபதி நேற்றைய தினம் விகாரைக்கு திரும்பி இருந்த நிலையில், விகாராதிபதி பிணைக்காக கையொப்பம் இட்டவர்கள் 2 பேரின் வீட்டின் மீது நேற்று(4) இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கல்முனை 01 C பகுதியில் அமைந்துள்ள சிங்கள பகுதியில் உள்ள முஸ்லிம் குடியேற்ற தொடர்மாடி குடியிருப்பு பகுதிக்கு முன்னால் உள்ள 2 பேரின் வீட்டின் மீதே வாள் மற்றும் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மயில்வாகனம் முத்துலெட்சுமி மற்றும் ஹர்சன் டி சில்வா ஆகியோரின் வீடுகளே சேதமாக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் புலனாய்வு பிரிவினருக்கும் அறிவித்தார்.

அதன்படி (5) புதன்கிழமை பகல் பொலிசார் வந்து விசாரணை நடத்தினர்.

குறித்த விகாரையில் 3 சிறுவர் தேரர்கள் மீது பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்த விடயம் தொடர்பில் பல விடயங்கள் சமூக வலைதளங்களில் மாற்று தரப்பினரால் பேசப்பட்டு வரும் நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

அதே வேளை, விகாராதிபதி பிணை மனுவை எதிர்த்து கல்முனை நீதாவன் நீதிமன்றத்தில் போலீசாருடன் பத்துக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளை கொண்ட குழு வாதங்களை முன் வைத்திருந்த நிலையில், விகாராதிபதிக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது.

ஏற்கனவே, குறித்த சிறுவர் தேரர்கள் அம்பாறை பகுதியில் இருந்த விகாரை ஒன்றின் தேரர் ஒருவரினால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த சிறுவர் தேரர்கள் கல்முனை விகாரையில் இணைக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்முனை விகாராதிபதி கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் தொடர்பில் உறுப்பினர் ராஜனுடன் உண்ணாவிரதம் இருந்து, கல்முனை தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :