வெற்றுக்காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய படி மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பழைய வளத்தாப்பிட்டி விபுலானந்தர் வீதியை சேர்ந்த 64 வயதுடைய சவரிமுத்து தேவதாஸ் என்பவர் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் திங்கட்கிழமை(17) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
மேலும் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் கட்டளையிட்டார்.
மேலும் குறித்த மரணம் தூக்கினால் கழுத்து இறுகிய நிலையில் சம்பவித்துள்ளது என பிரேத பரிசோதனையில் குறிப்பிடப்பட்டு பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சுயநினைவின்றி காணப்பட்டார் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
0 comments :
Post a Comment