வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய நூலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றது.
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் 2016 மாணவர் அமைப்பினால் மாணவிகளின் கற்றல் செயற்பாடுகளுக்காக ஒரு தொகை புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.
பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் தலைமையில் இடம்பெற்ற புத்தகங்கள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் பிரதி அதிபர் ஏ.ஆர்.முகைதீன் பாவா, நூலக பொறுப்பசிரியர் எம்.ஐ.சபீக், பகுதித் தலைவர்களான எஸ்.பாறூக், கே.ஆர்.எம்.இர்ஷாத், ஆசிரியர்களான ஜே.எம்.நியாஸ், எஸ்.எம்.ஆதம் லெப்பை, எம்.எம்.பதுர்தீன், ஏ.எம்.றிஹானா, எம்.இந்துராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவிகளின் நலன் கருதி புத்தகங்களை அன்பளிப்பு செய்த மாணவர் அமைப்புக்கு பாடசாலை அதிபர் நன்றிகளை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment