நிந்தவூர் பிரதேச சபை அமர்வில் முஷாரப் எம்.பிக்கு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்



நூருல் ஹுதா உமர்-
நிந்தவூர் பிரதேச சபையின் 55 ஆவது சபை அமர்வு (27) நிந்தவூர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது சபையின் வழமையான நடவடிக்கைகளை தொடர்ந்து சபையின் உறுப்பினர் திருமதி. சுதாமதி திருகோணமலை திருக்கோனேஸ்வரர் ஆலையத்தின் புராதன அடையாளங்களைப் பாதுகாப்பது மற்றும் ஆலையத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் போன்ற விடையங்களை முடக்கும் வகையிலான செயற்பாடுகள் திட்டமிட்ட பேரினவாத குழுக்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை கண்டித்து கண்டனப் பிரேரனையொன்று சபையில் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த பிரேரனையின் பிரகாரம் கண்டத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அதே போல நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெற்று வருகின்ற கடலரிப்பினை தடுப்பதற்கான நிரந்தர தீர்வு நோக்கிய நகர்வில் கட்சி பேதங்களின்றி நிந்தவூர் பிரதேச சபை செயற்பட்டுவருகின்ற இந்த சந்தர்ப்பத்தில் நிந்தவூர் பிரதேச சபையின் உதவித் தவிசாளர் தான் சார்ந்த அரசிடம் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரம் முதற்கட்டமாக 65 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான விலைமனுவும் பத்திரிகைகளில் கோரப்பட்டுள்ளது. இந்த விடையத்தை தான் செய்ததாக அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் முதுநபீன் முற்றிலும் பொய்யான வதந்திகளை சமூகவலைத்தள ஊடகங்களில் பரப்புவதை சபை வன்மையாக கண்டித்ததுடன் அவருக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சிறி லங்கா சுதந்திர கட்சி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களினால் ஏகமனதாக கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :