சர்வதேச சிறுவர் தினத்தில் சர்வதேச விருதை வென்ற சிறுமி மின்னும் தாரகை மின் மினி மின்ஹா



ந்திய தேசத்தின் சக்ரா மின்னியல் விருதினை மின்மினி மின்ஹா சுவீகரித்து இலங்கைக்கு பெருமையைத் தேடிக் கொடுத்துள்ளார்.

மாண்புமிகு பாரத பிரதமர்- நரேந்திரமோடி அவர்களின் பிறந்த நாளை 17.10.2022 முன்னிட்டு பசுமை வாசல் பெளண்டேஷன், சின்னாளப்பட்டி, திண்டுக்கல் , ஸ்ரீ சக்ஸஸ் அகடமி & பெளண்டேஷன், ஆத்தூர், சேலம், தெய்வீகத் தமிழ் அறக்கட்டளை மற்றும் உலக செம்மொழி பயிலரங்க மன்றம்,கோவை, ஸ்ரீ ஹயக்ரீவர் கலை மற்றும் கலாச்சார அகாடமி, ஈரோடு ஆகிய அமைப்புக்கள் இணைந்து நடாத்திய தேசத்தின் சக்ரா விருதுகளை வழங்கி இருந்தனர்.

"இளம் படைப்பாளருக்கான- ஒளிசுடர் சக்ரா விருதினை" இலங்கையைச் சேர்ந்த ஜலீல் பாத்திமா மின்ஹா (11) தன்வசமாக்கிக் கொண்டார்.
இவர் சம்மாந்துறைப் பதியில் வசித்து வருகின்ற மின்மினி எனும் புனைப்பெயர் கொண்ட இளம் படைப்பாளர் பற்றிய அறிமுகம்.....

இவர் கமு/சது/ அல்- அர்சத் மஹா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)யில் 06ம் தரத்தில் கல்வியைத் தொடர்கிறார்.

*இவர் சாதித்தவைகள்...*

● *7வது* வயதில் சாரணிய இயக்கத்தில் இணைந்து கொண்டு *மாவட்டத்தின் முதலாவது "சிங்கிதி சாரணியராக பதக்கம்* பெற்றார்.

● *8வது* வயதில் மாவட்ட *"சிங்கிதி தலைவியாக" (District Siggithi Scout Leader) பதவி* பிரமாணம் செய்து தலைமை தாங்கினார்.

● *9வது* வயதில் "குருளைச் சாரணிய தலைவியாக செயற்பட்டார்.

● *9வது* வயதில் தான் எழுதி வடித்த கவிதைகளை உள்ளடக்கிய *மின்மினியின் கீறல்கள்* என்ற கவிதைப் புத்தகத்தினையும் வெளியிட முயற்சிகள் அனைத்தும் செய்து முடித்துள்ளார்.

● *10வது* வயதில் (2021) சம்மாந்துறை வலய மடட குருளைச் சாரணிய தலைவியாக தெரிவுசெய்யப்பட்டு செயற்பட்டுள்ளார்.

● *11வது* வயதில் (2022) இருந்து சம்மாந்துறை பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் கீழ் இயங்கும் "துறைச்சிறார் கலைக் கழகத்தின்" - 'பிரதித் தலைவியாக' தெரிவு செய்யப்பட்டு இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

● *11வது* வயதில் (2022.08.08) கமு/சது/ அல்-அர்சத் மஹா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) யில் "கனிஷ்ட சாரணியையாக" சத்தியப்பிரமானம் செய்து கொண்டு , அணித் தலைவியாகவும் செயற்படுகிறார்.

*இவர் பெற்ற விருதுகள், சான்றிதழ்கள், பாராட்டுக்கள், கௌரவங்கள்:*

● *8வது* வயதில் தற்காப்புக் கலை (சொட்டோக்கான் கராட்டி கலை) *பயிற்சி பெற்று வருவதுடன், போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி சான்றிதழ்களும்* பெற்றுள்ளார்.

● *8வது* வயதில் (2019.12.28) பிரதேச கலை இலக்கிய விழாவில்- நிகழ்வில் பங்கு கொண்டமைக்காக பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

● *9வது* வயதில் (2021.05.16) இந்திய தேசத்தின் தமிழ்நாட்டு பசுமை வாசல் பவுண்டேஷன் , காருண்யம் டிரஸ்ட் மற்றும் ஒளிச்சுட சேவா டிரஸ்ட் இணையத்தில் இணைந்து வழங்கிய இளம் கலைஞர்களுக்கான "பாராட்டுச் சான்றிதழ்" வழங்கப்பட்டு பாராட்டப்பட்டார்.

● *11வது* வயதில் (2022.08.20) இலங்கை சாரணர் சங்க அக்கரைப்பற்று- கல்முனை மாவடட சாரணர் சங்கம் நடாத்திய ஒரு நாள் சாரணர் பயிற்சிப் பாசறையில் பங்குபற்றியமைக்காக சான்றிதழும், நிகழ்வில் தனது திறமையை காண்பித்தமைக்காக பணப் பரிசும் வழங்கி பாராட்டி இருந்தார்கள்.

● *11வது* வயதில் (2022.08.29) கலாசார அலுவல்கள் திணைக்கள வழிகாட்டலில் சம்மாந்துறை பிரதேச செயலக கலாசாரப் பிரிவு மற்றும் கலாச்சார அதிகார சபை இணைந்து நடாத்திய "அழகிய சிறுவர் சமூக வேலைத் திட்டம்-2022" கலைப் பயிற்சி பட்டறையில் பங்குபற்றியமைக்காக சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது.

*அவற்றில் குறிப்பாக :*

● *11வது* வயதில் (2022.08.30) கமு/சது/அரபா வித்தியாலயமும், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகமும் இணைந்து "புலமையாளர் பாராட்டு விழா-2022" நிகழ்வில் உலகளாவிய ரீதியில் பேச்சுப் போட்டியில் வெற்றிச் சான்றிதழை சுவீகரித்தமைக்காக - இவர் *விழாவுக்கு மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டு , பொன்னாடை போர்த்தி , "சர்வதேச பறவை" எனும் விருதும் வழங்கி* கௌரவித்திருந்தனர்.

● *11வது* வயதில் (2022.09.13) சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ. தவிசாளர் மற்றும் ஏனைய கௌரவ உறுப்பினர்களின் ஏற்பாட்டில் பாராட்டி,பொன்னாடைகள் போர்த்தி கௌரவித்து, சான்றிதழ் மற்றும் பரிசுகளும் வழங்கி இருந்தனர்.

2022.10.17ல் அயல் தேசத்தின் இளம் சாதனையாளருக்கான ஒளிசுடர் சக்ரா விருதுக்கான மின்னியல் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டுள்ளார்.

எதிர்காலத்தில் சர்வதேச மட்டத்தில் சிறந்த ஒரு கலைஞராக திகழ்வார் என வாழ்த்துவோம்.

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :