நாட்டின் சுற்றுலாத்துறைக்கும், கிழக்கின் மேம்பாட்டுக்கும் உதவ சவூதி அரேபியா தயாராக உள்ளது : கல்முனை பிரதிமுதல்வரிடம் உறுதியளித்த தூதுவர்.



எம்.என்.எம். அப்ராஸ், நூருல் ஹுதா உமர்-
லங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கு சஊதி அரேபிய தூதரகத்தின் ஊடாக முடியுமான உதவிகளை பெற்றுக் கொடுப்படுப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள விருப்பதாக சஊதி அரேபிய தூதுவர் காலித் ஹமெளத் என். அல்கஹ்தானி ரஹ்மத் மன்சூர் பௌண்டஷன் பிரதானியும், கல்முனை மாநகர பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூரிடம் உறுதியளித்துள்ளார்.

கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூருக்கும்- சஊதி அரேபிய தூதுவர் காலித் ஹமெளத் என். அல்கஹ்தானியை கடந்த வியாழக்கிழமை (20) கொழும்பிலுள்ள அந்நாட்டு தூதுவராலயத்தில் இடம்பெற்ற சந்திப்பின் கலந்துரையாடலின் போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியதாக பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவுக்கு சவூதி அரேபிய தூதுவரை பிரதம அதிதியாக கலந்து கொள்ளச் செய்வதற்கான அழைப்பை கல்லூரி சார்பில் விடுத்ததாகவும் இதன்போது கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்கான விருப்பதை தூதுவர் வெளிப்படுத்தியதாகவும், இந்த அரபுக் கல்லூரியின் கல்வித்துறையை இன்னும் மேம்படுத்த வேண்டும் எனவும் இக்கல்லூரியில் இருந்து வெளியாகும் மாணவர்களுக்கு சவூதி அரேபியாவில் தகுந்த தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கு உதவுவதாகவும் தூதுவர் இதன்போது உறுதியளித்தாகவும்,


கிழக்கு மாகாணத்திலுள்ள அறுகம்பை, பாசிக்குடா போன்ற முக்கிய சுற்றுலாத்தளங்களுக்கு விஜயம் செய்து, இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கு விருப்பம் கொண்டிருப்பதாகவும், இலங்கையின் அபிவிருத்திக்கும் கிழக்கு மாகாணத்தின் முன்னேற்றத்திற்கும் முடியுமான உதவிகளை செய்வதற்கும் தாம் தயாராக இருப்பதாகவும் சஊதி அரேபிய தூதுவர் உறுதியளித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :