மருதமுனை வரலாற்றில் முதல் தடவையாக மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மற்றும் அல்-மனார் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) களில் கல்விகற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து ''கடினமாக விளையாடுங்கள் உண்மையாக இருங்கள்" (play hard stay true) எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியும் சினேகபூர்வ உதைபந்தாட்ட போட்டியும் நாளை சனிக்கிழமை (2022.10.08) காலை 7.30 மணிக்கு மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த விளையாட்டு விழாவில் ஷம்ஸ் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் 1997, 1998 ஆம் ஆண்டுகளில் சாதரணதரப் பரீட்சைக்கு தோற்றிய பழைய மாணவர் அணிகளும் - அல்-மனார் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் 1997. 1998 ஆம் ஆண்டுகள் சாதரணதரப் பரீட்சைக்கு தோற்றிய பழைய மாணவர் அணிகளும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பரிசளிப்பு நிகழ்வின் போது வெற்றி பெறும் அணிகளுக்கான சம்பியன் கிண்ணம் மற்றும் விசேட திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்களுக்கான சிறப்பு பரிசில்களும் மருதமுனை 'முஹம்மட் மென்ஸ் வெயா' அனுசரணையில் வழங்கி வைக்கப்படவுள்ளன.
வரலாற்று சிறப்புமிக்க இவ் விளையாட்டு விழாவினை கண்டு களிப்பதற்கு விளையாட்டு ரசிகர்கள் அனைவரையும்
ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றார்கள்.
0 comments :
Post a Comment